ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய விருப்பம்!ருவன் விஜயவர்த்தன
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்த பலர் ஐக்கிய தேசியக்கட்சியில் மீண்டும் இணைய விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் உதவி தலைவர் ருவன் விஜயவர்த்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஆறு மாதங்களுக்குள் பலர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவார்கள் என்று பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்சியின் செயற்பாடுகளில் இருந்து தூர விலகி நிற்கும் நவின் திசாநாயக்க, ரவி கருணாநாயக்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் விரைவில் கட்சியில் இணைந்து செயற்படுவர் என்ற நம்பிக்கை இருப்பதாக ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரிய நேரத்தில் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam