அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு ருவான் விஜேவர்தன வழங்கியுள்ள ஆலோசனை
அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது சிறப்புரிமைகள் பற்றியோ, நாடாளுமன்ற ஊதியம் குறித்தோ சிந்திக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardene) கட்சியின் இளம் தலைமுறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலைத்திட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டுக்கு மட்டுமல்லாது கட்சிக்கும் தலைமை தாங்கப் போகும் இளைஞர்களாகிய நீங்கள், அமைச்சர்களுக்கான சிறப்புரிமை, நாடாளுமன்ற ஊதியம் குறித்துச் சிந்திக்காது நாட்டை பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படி எண்ணி அரசியலில் ஈடுபடுங்கள்.
இப்படி எண்ணாத காரணத்தினாலேயே மக்களுக்கு அரசியல் மீது தற்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளைப் பெற்று தம்மைப் போஷித்துக் கொள்வதாக அனைத்து அரசியல்வாதிகள் மீதும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர் பதவிகளைப் பெற்று சிறப்புரிமைகளை அனுபவிப்பதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. நாம் அந்த இடத்திற்குத் தள்ளப்பட்டு விடக் கூடாது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
