எரிக் சொல்ஹெய்மை சந்தித்துள்ள ருவன் விஜயவர்தன (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்மை, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன சந்தித்துள்ளார்.
இந்த விடயத்தை ருவன் விஜயவர்தன தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்
அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் குறித்தும், அதற்கு சர்வதேச ரீதியாக கிடைக்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.