விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றிய எரிக்கிற்கு ரணில் வழங்கியுள்ள நியமனம் (Photos)
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்மிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய நியமனமொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆகியோரை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
சமாதான பேச்சுவாரத்தையில் பங்களிப்பை வழங்கியிருந்த எரிக் சொல்ஹெய்ம்
நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan ?? President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership!
— Erik Solheim (@ErikSolheim) October 12, 2022
Proud to be appointed his International Climate Adviser together with @MohamedNasheed @RW_UNP @SriLankaTweet pic.twitter.com/1UnhQOCA4j