மரியுபோல் நகரின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 200 சவக்குழிகள் (PHOTO)
உக்ரைன் - மரியுபோல் அருகே 200 மிகப்பெரிய சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமொன்று செயற்கைக்கோள் படத்தினை வெளியிட்டுள்ளது.
மரியுபோலுக்கு வெளியே உள்ள மன்ஹுஷ் நகரத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து நீண்ட வரிசையாக தோண்டப்பட்டுள்ள மிகப்பெரிய சவக்குழிகளை அந்த செயற்கைகோள் படம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,போரின்போது கொல்லப்பட்ட 9,000 உக்ரைனிய குடிமக்களை ரஷ்யா புதைத்துள்ளதாகவும்,நகரத்திலிருந்து கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை எடுத்து மன்ஹுஷில் சவக்குழிகளில் புதைத்ததன் மூலம் ரஷ்யர்கள் தங்கள் இராணுவ குற்றங்களை மறைத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
"இறந்தவர்களின் உடல்கள் டிரக்கில் கொண்டு வரப்பட்டு அவை கல்லறைகளில் கொட்டப்பட்டன " என்று பாய்சென்கோவின் உதவியாளர் பியோட்ர் ஆண்ட்ரியுஷ்செங்கோ கூறியுள்ளார்.