புடினின் கோர முகத்தை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள் (PHOTO)
ரஷ்ய துருப்புகளின் கொடூரங்கள் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் முன்னெடுத்த படுகொலைகள், கொடூரங்களை தனியார் நிறுவனம் ஒன்று செயற்கைக்கோள் படங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படங்கள் அனைத்தும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மரியுபோல் நகரின் மத்தில் இருந்து 12 மைல்கள் தொலைவில் புதிதாக 200 கல்லறைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 400,000 மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரம் 8 வார கால தொடர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் அப்பாவி மக்கள் 10,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 90% உள்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,அதில் 40% உள்கட்டமைப்புகள் மறுசீரமைக்க முடியாதவகையில் சேதமடைந்துள்ளதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு முக்கிய தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சர்வதேச நீதிமன்றம் விசாரணை முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, Azovstal இரும்பு தொழிற்சாலையில் சிக்கியுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின், அங்கிருந்து எவரும் வெளியேறவோ, உள்ளே செல்லவோ முடியாதபடி மொத்தமாக மூடிவிட கட்டளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.