சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை கோரும் முன்னாள் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தனது நாட்டிற்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு தொடர்ந்து தடை விதிக்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"அமைதிக்கான குறுகிய வழி உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாகும்" என்று போரோஷென்கோ சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"சர்வதேச சமூகத்திலிருந்து, எங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை அவை ஆயுதங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள்."
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி, 'ரஷ்யாவைத் தொடர்ந்து தடைசெய்யவும், அதன் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்க உக்ரேனிய வான்வெளியை மூடவும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
மேலும், மேற்கத்திய உலகம் ரஷ்யாவையும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் "முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும்.
இது தனது நாட்டின் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
