உக்ரைன் மற்றும் ரஷ்ய போர்: துருக்கியில் இ்டம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குமிடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் கீவ் நகர் அருகேயும், ஜெர்னிகிவ் நகரிலும் படைகளை குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 34 நாட்களாக நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.