ரஷ்யாவின் உயர் இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்! உக்ரைன் பதில் தாக்குதல்களின் முக்கிய கட்டம்
உக்ரைன் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போதே அவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
எனினும் ரஷ்ய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் கருத்து கூறவில்லை.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்- விட்டலி ஜெராசிமோவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர், ரஷ்யாவின் மத்திய 41 வது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதி ஆவார்.
இந்தநிலையில் தமது தாக்குதல்களின்போது ரஷ்யாவின் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று உக்ரைன் இராணுவம் கூறுகிறது.
கொல்லப்பட்ட ஜெராசிமோவ் இரண்டாவது செச்சினிய போரிலும் சிரியாவில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றதாக உக்ரேனிய உளவுத்துறை கூறுகிறது.