சிசுக்களுக்கு எதிரான ஆபத்தான களமாக மாற்றப்பட்டுள்ள உக்ரைன் போர்க்களம்! (காணொளி)
உக்ரைன் போர்க்களம் இரண்டாவது மாதத்துக்குள் பிரவேசிக்கிறது இந்தநிலையில் உக்ரைனின் சில பகுதிகளில் குறைப்பிரசவங்களின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கார்கிவ் மற்றும் எல்விவ் ஆகிய இரண்டு நகரங்களில் மாத்திரம் இந்த உயர்வு இரண்டு அல்லது மூன்று மடங்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களில், போருடன் தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் மருத்துவப் பிரச்சினைகளின் விளைவாக, குறைப்பிரசவங்களின் விகிதம் இருமடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கார்கிவின் பிராந்திய பெரினாட்டல் என்ற இடத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் நிறை, வெறும் 630 கிராமாக இருந்துள்ளது.
இது நிறைமாத பெண் குழந்தையின் சராசரி எடையில் ஐந்து மடங்கு குறைவானது.
கெய்வில் தாய் ஒருவர் 800 கிராம் நிறைக்கொண்ட குழந்தை ஒன்றை பிரவசித்தார்.

ரஸ்யப் படைகளால் மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த பிரசவங்கள் நிகழ்கின்றன.
“போர் பதற்றம், நோய்த்தொற்றுகள், மருத்துவ உதவியின்மை, மோசமான ஊட்டச்சத்து போன்றவை, முன்கூட்டிய பிறப்பு அபாயத்தை உருவாக்குவதாக மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
மோதல் பிரதேசங்களில் பெண்கள் நெரிசலான அடித்தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்,
அங்கு நோய்த்தொற்றுகள் அதிகமாகியுள்ளன. அத்துடன் பெண்களுக்குத் தேவைப்பட்டால் மருத்துவ உதவியை அடைவதும் கடினமாகியுள்ளதாக அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆறு மாத கர்ப்பிணி மற்றும் இரட்டை குழந்தைகளை எதிர்பார்க்கும் தாய், ஒருவர், தனது குழந்தைகளைப் பெறுவதற்கு பாதுகாப்பான இடத்துக்கு ஊரடங்கையும் பொருட்படுத்தாது சென்றுள்ளாள்.
எனினும் லிவிவ் என்ற நகரை அடைய மூன்று நாட்களான நிலையில் அவளால் பயத்தால் சாப்பிடவோ எதனையும குடிக்கவோ முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்;டுள்ளது. இதனால் அந்த தாய் 3.5 கிலோ நிறையை இழந்துள்ளார்.

இந்தநிலையில் பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் எல்விவில் நகரில்; உள்ள மருத்துவமனையை சுற்றி ஏற்கனவே மணல் மூட்டைகளை அடுக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போத பலவீனமான நோயாளிகளை காப்பகங்களில் தங்க வைக்க ஒரு சிறப்பு நிலத்தடி பதுங்கு குழியை மருத்துவமனை நிர்வாகம் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உன்ரைன் போரில் மருத்துவமனைகயும்; இலக்காகியுள்ளன என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.