ரஷ்ய படையினரின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு : மீட்பு பணிகள் தீவிரம் (Photos)
உக்ரைனின் மைக்கோலேவ் பகுதியின் மீது ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
22 பேர் காயமடைந்தமையை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது பிராந்திய நிர்வாக கட்டிடம் பாரிய சேதத்துக்கு உள்ளானது.
இதேவேளை கிழக்கு உக்ரைனில் தாக்குதல்களை ரஷ்ய படையினர் நடத்தி வருகின்றபோதும் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தை கைவிடவில்லை என்று கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் ஸ்தம்பித்துள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் செர்னிஹிவ், சுமி அல்லது கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றுவதற்கான முக்கிய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ரஷ்யப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரைனியப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.