நாங்கள் போரில் இறந்தால் எங்கள் குழந்தைகளை வரவேற்றுக்கொள்ளுங்கள் - உக்ரைன் தாய்மார்கள் உருக்கம் (PHOTO)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 41ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், போரில் இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா ஏவுகணை மற்றும் குண்டு தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சிதைந்து வருகின்றது. பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும், கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டவர்கள் சித்ரவதை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், குழந்தைகளின் முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தினரின் தொடர்பு விபரங்களை குழந்தைகளின் தாய்மார்கள் எழுதி வெளியிட்டுள்ள படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
போர் முழக்கங்களுக்கு மத்தியில், உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் வாழும் உக்ரைன் தாய்மார்கள், தங்கள் சிறு குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில்,தாயொருவர் “ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், இவளை யாராவது வரவேற்றுக் கொள்ளுங்கள்” என்று உக்ரைன் மொழியில் குறிப்பிட்டு குழந்தைகயின் முதுகு பகுதியில் எழுதி புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
Ukrainian mothers are writing their family contacts on the bodies of their children in case they get killed and the child survives. And Europe is still discussing gas. pic.twitter.com/sK26wnBOWj
— Anastasiia Lapatina (@lapatina_) April 4, 2022