உக்ரைன் போரில் தமிழ் இளைஞன்! வெளியான காரணம்- உலக செய்தி (Video)
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தன்னை வாழ வைத்து உணவு அளித்த ஒரு நாடு பிரச்சினையில் சிக்கியிருக்கும் போது, அதை அப்படியே கைவிட்டு வருவது சரியாக இருக்காது என்கிறார் அந்த தமிழன்.
அதேவேளை உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் மிக ஆபத்தான சூழ்நிலையிலும் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உதவி வருபவர் தான் சென்னையை அடுத்த சிறிபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,