உக்ரைன் போர்க்களத்தில் திருப்பத்தை கொண்டு வர மற்றும் ஒரு முயற்சி! எர்டோகன், புடினுடன் பேசுகிறார்;
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் இன்று தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடுவார் என்று கிரெம்ளினை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று இஸ்தான்புலில் ரஸ்ய- உக்ரைனிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது
கொள்கையளவில், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் நாடாக செயல்படத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அத்தகைய வடிவமைப்பின் விபரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எர்டோகன் ஏற்கனவே கூறியுள்ளார்.
இதனையடுத்து நடுநிலை கொள்கையை உக்ரைன் முன்மொழிந்துள்ளது -
அதாவது, நேட்டோ போன்ற இராணுவக் கூட்டணிகளில் சேரக்கூடாது அல்லது இராணுவத் தளங்களை நடத்தக்கூடாது என்ற முன்மொழிவுகளே அவையாகும்.
இதேவேளை எர்டோகன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் நேற்று வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.
ரஸ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்ய அங்காரா முன்வந்துள்ள நிலையிலேயே துருக்கியின் ஜனாதிபதி இரண்டு தரப்பினருடனும் பேச்சு நடத்தியுள்ளார்.