அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யா: மீண்டும் விடுக்கப்படும் எச்சரிக்கை(PHOTOS)
உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டுவருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வந்தாலும், கடுமையான பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் நிலையில், போரை உடனடி முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடியாக, ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
ரஷ்யா நெருக்கடியை சமாளிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் உருவாகும் எனவும், அதற்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.




குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
