உக்ரைனிய வீரர்கள் சரணடைய மாட்டார்கள்: டெனிஸ் ஷ்மிஹால்
மரியபோலில் ரஷ்ய படையினருக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் உக்ரைனிய வீரர்கள் சரணடைய மாட்டார்கள் என்று பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் எஞ்சியிருக்கும் உக்ரைனியப் படையினர் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் சரணடைவதற்கான ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரியபோல் நகரம் இன்னும் ரஷ்யாவிடம் வீழவில்லை என்றும் ஷ்மிஹால் கூறியுள்ளார் இன்று ஞாயிற்றுக்கிழமை, சரணடையும் உக்ரைனிய வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்யா ஏற்கனவே அறிவித்திருந்தது.
கிரெம்ளின் நகரத்தில் எஞ்சியிருக்கும் உக்ரைனிய வீரர்கள் ஒரு பெரிய இரும்புத் தொழிலில் இருப்பதாகவும் அவர்களையே தாம் சரணடையுமாறு கோரியுள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்திருந்தது.
இதேவேளை உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் Oleksiy Goncharenko, தாம், மரியபோலில் உள்ள வீரர்களுடன்
பேசியதாகவும், அவர்கள் இறுதிவரை ரஷ்யாவுக்கு எதிராக போராடப் போகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.