ஸெலன்ஸ்கியின் இறுதி எச்சரிக்கை! ஆக்கிரமிப்பு ரஸ்யவர்களுக்கு உதவுவோர் நிலைக்கமுடியாது!
உக்ரைனில் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் நிறுவப்பட்ட ரஸ்ய சார்பு தலைவர்களுக்கு நீண்ட காலம் நீடிக்கமாட்டார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை காலை வேளையி;ல் அவர் வெளியிட்ட காணொளி உரையில், தலைமைக் கையகப்படுத்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான ஏப்ரல் ஃபூல் நகைச்;சுவை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை அல்லது நாளை மறுநாள் என்பது அல்ல. நீதி மீட்டெடுக்கப்படும். இது தவிர்க்க முடியாதது என்றும் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
தம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் நியமனம் பெற்றவர்களுடன் ஒத்துழைக்குமாறு உக்ரைனின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழியர்களை மொஸ்கோ அச்சுறுத்துகிறது என்றும்; ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும், அவர்களால் பதவிகளை பெற்றவர்களுக்கு இறுதி எச்சரிக்கையை விடுப்பதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் கிழக்கில் இராணுவ நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார்
அதேநேரம் ரஸ்ய துருப்புக்கள் வடக்கில் மெதுவான ஆனால் கவனிக்கத்தக்க விகிதத்தில் திரும்பிச்செல்வதாக குறிப்பிட்டுள்ளார்
எனினும் டான்பாஸ் பகுதியிலும் கார்கிவ் நகரத்திலும் குவிந்து, புதிய சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு ரஸ்ய படையினர்; தயாராகி வருகின்றனர் என்று அவர் எச்சரித்தார்.
எனவே கடினமான போர் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.