“உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றம்” - கர்ப்பிணி பெண்ணும் சிசுவும் மரணம்!(வீடியோ இணைப்பு)
உக்ரைன் மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது குழந்தையும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள், இந்த பெண் சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்படுவதை காண்பித்தது.

இந்தநிலையில் அவருக்கு குழந்தை சனிக்கிழமை அவசர பிரிவில் பிறந்தது.
எனினும் பின்னர் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதேவேளை உக்ரைன் அதிகாரிகளின் தகவலை மறுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள், மகப்பேறு மருத்துவமனையை உக்ரைன் தீவிரவாதிகள் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்காகக் கையகப்படுத்தியிருந்தனர். அத்துடன் அது மருத்துவமனையாக இயங்கவில்லை என்றும் கூற்றுக்களை முன்வைத்துள்ளனர்.
எனினும் உக்ரைனிய அதிகாரிகள் இந்த கூற்றுக்களை கடுமையாக மறுத்துள்ளனர். அத்துடன் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.