ரஷ்ய பெண் செய்தியாளர் எங்கே? உக்ரைன் தலைநகரில் 35 மணிநேர ஊரடங்கு!(வீடியோ)
ரஷ்யாவின் அரச தொலைக்காட்சியின் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் இருந்து ரஷ்ய நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்ட செய்தியாளர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவரது சட்டத்தரணி காவல்துறை நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு தேடிய போதும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்தநிலையில் ரஷ்யாவில் சில வார்த்தைகளை வெளியிடுவது குற்றவியல் குற்றம் என்ற வகையில் அவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அவர் மொஸ்கோ நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மொஸ்கோவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக நேற்று இரவு ரஷ்யாவின் அரச தொலைக்காட்சியில் எதிர்ப்பை வெளியிட்ட பெண் செய்தியாளரின் செயல் போக்கிரிதனம் என்று கிரெம்ளினின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவையின் ஆசிரியரான மெரினா ஓவ்ஸ்யானிகோவா, செய்தி வாசிப்பாளரின் பின்னால் போர் எதிர்ப்பு சுலோகத்தை வைத்திருந்தார்:
"போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள், பிரசாரத்தை நம்பாதீர்கள், அவர்கள் இங்கே உங்களிடம் பொய் சொல்கிறார்கள்." என்று அதில் எழுதப்பட்டிருந்தது
இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தை ரஷ்யப் படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் உக்ரேனிய தலைநகரான கிய்வில், செவ்வாய்க்கிழமை இன்று இரவு முதல் எதிர்வரும் வியாழன் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளது.
இதன்போது, சிறப்பு அனுமதியின்றி நகரத்தை சுற்றி வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
கீயேவ் தலைநகரம் உக்ரைனின் இதயம், அது பாதுகாக்கப்படும்.
அத்துடன் தற்போது ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகவும் முன்னோக்கி இயக்கத் தளமாகவும் இருக்கும் கியேவ், தங்களால் பாதுகாக்கப்படும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
