உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போராடத் தயாராகும் 3000 அமெரிக்கர்கள்! (photo)
உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வருமாறு வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கான விடுக்கப்பட்ட அழைப்புக்கு சுமார் 3000 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசாங்கம் இந்த அழைப்பை விடுத்திருந்ததாக வொஷிங்டனில் உள்ள உக்ரைன் துாதரக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் சண்டையிட துருப்புக்களை அனுப்பவில்லை,
எனினும் சண்டைக்கு உதவ உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன.
இந்தநிலையிலேயே ரஸ்யாவுக்கு எதிரான போருக்காக வெளிநாட்டு தன்னார்வலர்களின் "சர்வதேச படையணி"யை உருவாக்க உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் பிற மூத்த உக்ரேனிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கனவே சுமார் 16,000 வெளிநாட்டினர் உக்ரைனில் போராட உதவ முன்வந்ததாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
