போர்க்களத்தில் ரஸ்யாவின் 10 விமானங்கள் மீது தாக்குதல்! உக்ரைய்னின் உரிமைக்கோரல்! (காணொளி)
உக்ரைய்ன் போர்க்களத்தில் நேற்று ரஷ்யாவின் 10 போர் விமானங்களைத் தாக்கப்பட்டன.
அத்துடன் இரண்டு பாரிய ஆயுதத் தொடரணிகளை அழிக்கப்பட்டதாக உக்ரைனின் விமானப்படை கூறுகிறது.
எஸ்யூ ஜெட் விமானங்களும், எஸ்யூ-34 ரக விமானமும் தாக்கப்பட்டதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
போர் விமானம் ஒன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைய்ன் விமானப்படை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் குறித்த தகவல்களை உக்ரைன் வழங்கவில்லை.
இதேவேளை உக்ரையின் இந்த அறிக்கை குறித்து ரஷ்ய இராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பயிற்சி பெறாத பொதுமக்களை கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் முன்னணி போர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
100,000 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் இப்போது நாட்டின் பிராந்திய பாதுகாப்பு பிரிவில் சேர்ந்துள்ளனர்,
மேலும் 200,000 க்கும் மேற்பட்ட உக்ரைனிய குடிமக்கள் சண்டையில் உதவுவதற்காக ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் ஆயுதப்படை உறுப்பினர்களை விட ரஷ்ய துருப்புக்களால் அதிகமான உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam