மரியுபோல் நகரை அழித்துள்ள ரஷ்யர்களின் தாக்குதல்கள்! புதிய செய்மதி படங்கள் வெளியாகின (video)
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரையின் மரியுபோல் நகரம் பாரிய அழிவுக்கு உள்ளாகியிருப்பதை பிந்திய செய்மதி படங்கள் காட்டுகின்றன.
மெக்சர் நிறுவனம் இந்த செய்மதி படத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி மரியுபோல் நகரை சுற்றியுள்ள ரஸ்யாவின் தாக்குதல் மையங்களும் அழிவுக்குள்ளான நகரமும் காட்டப்படுகின்றன.
இது ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதி படம்

எறிகனை நிலைகள்

இவை தாக்குதலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட செய்மதி படங்கள்


மரியுபோல் நகரின் முதல்வர் வழங்கியுள்ள தகவல்படி, ரஷ்ய படையெடுப்பின் பின்னர் மரியுபோல் நகரில் 5000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இதில் 210 சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை மரியுபோல் நகரில் உக்ரைன் படையினர் ஆயுதங்களை கைவிடும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனுடன் இடம்பெற்ற உரையாடலின் போது உறுதியாக கூறியுள்ளார்.
எனினும் சரணடைய தாம் தயாரில்லை என்று மரியுபோல் பொதுமக்கள் ஏற்கனவே அறிவித்து விட்டனர்.