ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கை படையினர்: வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் படையினர் ரஷ்யாவிற்கு பயணம் செய்யும் போது அனுமதி பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுற்றுலா வீசா மூலம் ரஷ்யா செல்லும் முன்னாள் படை அதிகாரிகள் மற்றும் படையினர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் முன்னாள் படையினர் ரஷ்யாவிற்கு சுற்றுலா வீசா மூலம் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Had a productive meeting with a Business delegation from Pakistan, led by Honorary Consul of Sri Lanka in Lahore Mr .Yasin Joyia. The delegation comprised of 14 members of the Gujranwala Business Center (GBC) and Gujranwala Chamber of Commerce.
— M U M Ali Sabry (@alisabrypc) May 29, 2024
Discussions focused on… pic.twitter.com/YFt6QYG8le
சுற்றுலா விசா
வெளிவிவகார அமைச்சருக்கும், ரஷ்ய தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சுற்றுலா விசாக்களில் ரஸ்யா சென்று இலங்கையின் முன்னாள் படையினர் ரஷ்ய வாடகைப்படைகளில் இணைந்து போரிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைந்து கொண்ட சில முன்னாள் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா வீசாக்களில் ரஸ்யா சென்று அங்கு கூலிப் படைகளில் இணைவதனை தவிர்க்கும் நோக்கில், சுற்றுலா வீசாக்களில் செல்லும் முன்னாள் படையினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |