உலக கிண்ணப் போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்: சுவரொட்டியால் அச்சம்
அமெரிக்கா(America) - நியூயோர்க்கில் இரத்தம் சிந்துவது குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது(T20 World cup) போட்டிகளின் போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்குமா என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்-க்கு (ISIS) ஆதரவான சுவரொட்டியில், ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது.
ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆதரவான சுவரொட்டி
அத்துடன், அந்த சுவரொட்டியில் “நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று இரத்தச் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.
2024 ஜூன் 9 ஆம் திகதியன்று 'நாசாவ் மைதானத்தை (Nassau Stadium) இந்த சுவரொட்டி குறிப்பிடுவதுடன் குறித்த திகதியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தமது குழு ஆட்டத்தில் போட்டியிடவுள்ளன.
மேலும், சுவரொட்டியில் மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்களின் படங்கள் மற்றும் டைனமைட் குச்சியுடன் கூடிய கடிகாரம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த சுவரொட்டி அச்சத்தை தூண்டவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
