இலங்கையில் துன்புறுத்தப்பட்ட ரஸ்ய சுற்றுலாப் பயணிகள்: சம்பிக்க ரணவக்க கவலை
இலங்கையில் உள்ள கடற்கரை ஹோட்டல் ஒன்றில் ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்று ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட நீண்ட கால மற்றும் வலுவான இராஜதந்திர உறவுகளை இலங்கையும் ரஸ்யாவும் அனுபவித்து வருகின்றன.
உரிய நடவடிக்கை
எனினும், இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவையும் சீர்குலைக்கும்.

சம்பவத்தின் ஒரு தரப்பு என்ற வகையில், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்கவும், துன்புறுத்தலுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதி விரைவாக வழங்கப்படுவதும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குவதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri