சுற்றுலா விசாவில் வர்த்தகம் செய்யும் ரஷ்யர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு
சுற்றுலா வீசாக்களுடன் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாயின் அவர்கள் வர்த்தக விசாவை பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி இமதுவ பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (06) இமதுவ பிரதேச செயலகத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
அஹங்கம பிரதேசத்தில் ரஷ்யர்களே அதிகளவான வர்த்தகத்தை மேற்கொள்வதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இமதுவ மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேங்களுக்கான ஒதுக்கீட்டில் இமதுவைக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அங்கு 1,850 மீற்றர்களுக்கு கார்பட் ஈடும் பணியை மேற்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஏற்றுமதி அதிகரிப்பு
தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பணம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இமதுவ பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலா அபிவிருத்திகள் தொடர்பில் முன்மொழிவுகளை மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எமது அமைச்சினால் கட்டுமாணத்துறை தொழிலுக்கு அதிக சம்பளத்தில் இஸ்ரேலுக்கு செல்லக்கூடியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கஷ்டப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அஸ்வெசும திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களில் 15 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றன.
அத்துடன் நாட்டில் முடங்கப்பட்டு இருந்த அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டொலரின் விலை குறைந்து, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அதிகரித்தது, ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் மின் கட்டணத்தையும், எரிபொருள் விலையையும் மேலும் குறைக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam