ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் : துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய போர்க்கப்பல்
ஆங்கிலக் கால்வாயில் ஒரு படகின் மீது ரஷ்யப் போர்க்கப்பல் எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்த தகவல்களை நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கடற்படைக் கப்பல் ஒன்றால்
ஐக்கிய ராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சொகுசுப் படகு, ஐக்கிய ராச்சியத்தின் கடல் எல்லைக்கு வெளியே, வைட் தீவுக்குத் தெற்கே சுமார் 20 மைல் (32 கிலோமீட்டர்) தொலைவில், ரஷ்ய கடற்படைக் கப்பல் ஒன்றால் சுடப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படகுக்கு எந்தக் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், றோயல் நேவியின் ஹெச்எம்எஸ் மெர்சி என்ற கப்பல் அந்த ரஷ்யக் கப்பலைக் கண்காணித்து வருகிது.
ஒரு சில தினங்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் நிழல் கப்பலை பறிமுதல் செய்தமை கறிப்பிடத்தக்கது.