இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப்பயணி மரணம்
வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 ரஷ்ய பிரஜை
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது. வெலிகமை பொலிஸ் பிரிவில் காலி-மாத்தறை பழைய வீதியில் உள்ள வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த 32 வயதான ரஷ்ய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் வெலிகமை பொலிஸ் நிலையத்திற்கு 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் ஊடாக வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.
வெலிகமை நகரம்
இதனையடுத்து அங்கு சென்ற வெலிகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் உடலை மீட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் எம்.எம்.அமரஜீவவுக்கு அறிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் குறித்து அறிய சம்பவம் தொடர்பாக வெலிகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
