ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு
ரஷ்யா பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவையும் சந்தித்துள்ளார் என்று இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ரஷ்ய - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு
மேலும், சர்வதேச நிகழ்ச்சி நிரல் விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் கடைசியாக 2021 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|