தென்னிலங்கையில் பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்ற மூன்று சகோதரர்கள்
தென்னிலங்கையில் ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் சாதாரண தர பரீட்சையில் 25 சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மாபலகமவில் வாழும் அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க ஆகிய சகோதரர்களே இவ்வாறு சித்தி பெற்றுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள்
அதற்கமைய, அனுத 9 ஏ சித்திகளையும் அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 1 பி சித்தியையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்தனர்.
ஒன்றாக பிறந்த மூன்று சகோதரர்களும் நாகொடை ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஒன்றாகக் கற்று 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றனர்.
காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri
