கருங்கடலில் புயலில் சிக்கிய மற்றுமொரு ரஷ்ய எண்ணெய் கப்பல்
கருங்கடலில் 14 ஊழியர்களுடன் சென்ற மற்றுமொரு ரஷ்ய எண்ணெய் கப்பல் புயலில் சிக்கியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது நேற்று 15 ஊழியர்களுடன் சென்ற ஒரு கப்பல் இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றும் ஒரு கப்பல் புயலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர் பழி
நேற்று இடம்பெற்ற விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த கப்பல் அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |