உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு தெரிவித்ததுடன், புதிய இராணுவ உதவி தொகுப்பையும் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |