அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானம் : பதிலடிக்கு தயாரான சுவீடன்
ரஷ்ய(Russia) இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுவீடன்(Sweden) வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தின் போது ரஷ்ய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு போர் விமானங்கள்
இதனையடுத்து சுவீடன் ஆயுதப்படை சார்பில், ரஷ்ய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரஷ்ய விமானிகள் சுவீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்போது சுவீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டதையடுத்து ரஷ்ய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
ரஷ்ய விமானங்கள் சுவீடன் வான்வெளியில் நீண்ட நேரம் அத்துமீறியதாக சுவீடன் இராணுவம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் “ரஷ்யாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது,” என சுவீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
