நீடிக்கும் உக்ரைன் ரஷ்ய போர் - பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் விற்பனைக்கு வரம்பு
பிரித்தானியாவில் வாடிக்கையாளர்கள் சமையல் எண்ணெய் எவ்வளவு வாங்க முடியும் என்பதைக் சில பல்பொருள் அங்காடிகள் கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையோ போர் நீடித்துள்ள நிலையில் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சூரியகாந்தி எண்ணெய்யின் பெரும்பகுதி உக்ரைனில் இருந்து வருகிறது.
ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறுகள் சில தட்டுப்பாடு மற்றும் மாற்றுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலிவ், ராப்சீட் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் சில பல்பொருள் அங்காடிகளால் கடையில் மற்றும் ஆன்லைன் மூலம் வைக்கப்படும் வரம்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் பிரபல பல்பொருள் அங்காடிகளான மொரிசன்ஸ் மற்றும் வையிட்ரோஸ் ஆகியவைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெயின் பற்றாக்குறை காரணமாக ஏனைய பல்பொருள் அங்காடிகள் அதற்கு பதிலாக ஏனைய சமையல் எண்ணெய்களை வாங்குகிறார்கள்.
எனவே மொரிசன்ஸ் மற்றும் வையிட்ரோஸ் ஆகிய சுப்பர் மார்க்கெட்கள் அனைத்து எண்ணெய்களிலும் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இரண்டு பல்பொருள் அங்காடிகளும் புதிய விதிகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த கடைகளில் பதாதைகளை வைத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.