மன்னிப்பு கோரினார் ரஷ்ய ஜனாதிபதி! (Photo)
அடோல்ஃப் ஹிட்லருக்கு "யூத இரத்தம்" இருந்திருக்கலாம் என மொஸ்கோவின் உயர்மட்ட தூதர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
"லாவ்ரோவின் கருத்துக்களுக்காக ஜனாதிபதி புடினின் மன்னிப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார் எனவும், யூத மக்கள் மீதான அவரது அணுகுமுறைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்" என்று பென்னட்டின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களும் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், அதன் பிறகு புடினின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பென்னட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடால்ஃப் ஹிட்லருக்கு "யூத இரத்தம்" இருப்பதாக இந்த வாரம் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.
லாவ்ரோவ் இத்தாலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யூதராக இருந்தாலும், உக்ரைனில் நவ நாசிசம் இன்னும் இருக்கக்கூடும் என்று வாதிட்டார்.
லாவ்ரோவின் கருத்து "மன்னிக்க முடியாத மற்றும் மூர்க்கத்தனமானது. அதே போல் ஒரு பயங்கரமான வரலாற்று பிழை" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
"லாவ்ரோவின் கருத்துக்களுக்காக ஜனாதிபதி புடினின் மன்னிப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார், மேலும் யூத மக்கள் மீதான ஜனாதிபதியின் அணுகுமுறை மற்றும் ஹோலோகாஸ்ட் நினைவகம் ஆகியவற்றை தெளிவுபடுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்" என்று பென்னட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
