இலங்கைக்கு ரஷ்ய அரசாங்கம் வழங்கியுள்ள பெருந்தொகை நன்கொடை
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலக வளாகத்தில் இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் நிதியுதவி
2023 டிசம்பர் 30 ஆம் திகதி 117.3 மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2024 ஜனவரி 04 ஆம் திகதி 13.1 மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெயும் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 351.9 மெற்றிக் டன் சூரியகாந்தி எண்ணெய் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |