ரஷ்யாவின் கோரமுகம்! - குழந்தைகள் வைத்தியசாலையில் குண்டு வீசி அட்டுழியம்
உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையில் ரஷ்ய படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையில் இருந்து ஏழு குழந்தைகள், 15 பெரியவர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய வைத்தியசாலைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில், மார்ச் 9 திகதி மரியுபோலில் உள்ள ஒரு மகப்பேறு வைத்தியசாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய படையின் ஷெல் தாக்குதலால் பாடசாலை ஒன்று முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைனிய அரசாங்க அதிகாரி Emine Dzheppar தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் முற்றிலும் அழிக்கப்பட்ட பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். ரஷ்யா உக்ரைனிய குழந்தைகளை எதிர்காலம் இல்லாமல் விட்டுவிட விரும்புகிறது." என தெரிவித்துள்ளார்.
#Kharkiv, #Ukraine.
— Emine Dzheppar (@EmineDzheppar) March 22, 2022
This is one of the schools completely destroyed by #Russian occupants.#Russia wants to leave #Ukrainian children without a future.#RussiaInvadedUkraine#StandWithUkraine#StopRussianAgression#StopPutin #RussianWarCrimes#KharkivTribunal pic.twitter.com/OaM59BF37w