இலங்கையில் செயற்படும் தீவிரவாத குழுக்கள்! ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
கொரோனா தொற்றுக்கான நிதியுதவி என்ற போலிக் காரணத்தின் கீழ் இலங்கையில் தீவிரவாதக் குழுக்களுக்குப் பணம் அனுப்பும் நடவடிக்கைகள் குறித்து ரஷ்யா இலங்கைக்கு விளக்கமளித்துள்ளது.
இலங்கைக்கான ரஷ்யத் தூதர் யூரி பி. மெட்டேரி இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்த போது இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.
கொரோனாவுக்கு மத்தியில் இலங்கை- ரஷ்ய உறவுகள் குறித்து ரஷ்ய தூதுவரும் இலங்கையின் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரவும் நேற்று கலந்துரையாடலை நடத்தினர்.
இதன்போது பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான போலிக்காரணத்தின் கீழ் பல தீவிரவாத குழுக்களுக்குப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பணம் அனுப்புவதாக ரஷ்ய தூதர் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அத்தகைய குழுக்களை ஓரங்கட்டுவதற்கு ரஷ்யாவில் உள்ள தனது பிரதிநிதியுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு ரஷ்ய தூதர் இலங்கையின் அமைச்சரைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2009 உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் உளவுத்துறை பிரிவுகளை மூன்றிலிருந்து ஏழாக உயர்த்துவதற்கான இலங்கையில் மூலோபாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத வீரசேகர, ரஷ்யாவின் தூதுவரிம் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாகவே இலங்கையில் தீவிரவாதத்தைப் பரப்பியதாகக் கண்டறியப்பட்ட சுமார் 160 மத்ரஸா அறிஞர்கள் நாடு கடத்தப்பட்டதாக அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
எவ்வாறாயினும், 2015-2019ஆம் ஆண்டுகளில் பதவியிலிருந்த அரசாங்கம் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளை அகற்றியமை காரணமாகவே தீவிரவாத குழுக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தன என்று அமைச்சர் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam