ரஷ்யாவிற்கு ஜெலன்ஸ்கி விடுத்துள்ள பகிரங்க சவால்
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற்று போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளங்களில் அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில்,போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்.நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த உலகம் மறக்காது
எங்களது நிலத்தில் ரஷ்யாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம்.ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுப்போம்.
உக்ரைன் பிரச்சினை காலங்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பித்துள்ளோம். இதற்கு பின்னால், எங்களின் பெரிய முயற்சிகள் இருந்துள்ளன.
உக்ரைனுக்கு போருக்கு உதவி வரும் நாடு மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். இதனை இந்த உலகம் மறக்காது.”என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
