உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவின் சொத்துக்களை பறிமுதல் செய்த சுவிட்சர்லாந்து
சுவிஸ் அரசாங்கம் உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் நெருங்கிய சகாவின் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்' (£82m) மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
உக்ரைனின் 2014 புரட்சிக்குப் பிறகு முடக்கப்பட்ட யூரி இவான்யுஷ்சென்கோ மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ரஷ்யர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து விதித்த பொருளாதாரத் தடைகளுடன் தொடர்பில்லாதது என அறிவிக்கப்பட்டுள்ளது. யானுகோவிச் 2014 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார், இவர் ரஷ்யாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், யானுகோவிச்சின் பதவி நீக்கம் ரஷ்யாவின் கிரிமியாவை இணைப்பதற்கு முக்கியமானது என்றும், இறுதியில் படையெடுப்பிற்கு வழிவகுத்தது என்றும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.