உக்ரைன் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, ரஷ்யாவின் துல்லியமான ஏவுகணைகள் உக்ரேனிய விமானங்களை Artsyz, Odesa மற்றும் Voznesensky வான்வெளிகளில் அழித்ததாகக் கூறியுள்ளது.
இஸ்கந்தர் என்ற ஏவுகணைகள் கார்கிவ் அருகே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உபகரணங்களை தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், உக்ரேனிய அல்லது மேற்கத்திய அதிகாரிகளிடமிருந்து இது குறித்த உறுதிப்படுத்தல்கள் எவையும் வெளியாகவில்லை.
எனினும், நாள் முழுவதும், உக்ரைனில் பல ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகிழக்கில் கார்கிவ் மற்றும் சுமி முதல் தென்மேற்கில் ஒடேசா வரை தாக்குதல்கள் நடந்தன. ஆனால் ரஷ்ய தாக்குதலின் முக்கிய மையமாக டான்பாஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள.