ரஷ்ய-உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் நேரடி சந்திப்பை நிராகரித்துள்ள ரஷ்யா!
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் உக்ரைனிய ஜனாதிபதி ஸெலென்கிக்கும் இடையில் தற்போதைய நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படுவது காத்திரமானதாக இருக்காது என்று ரஸ்யா அறிவித்துள்ளது.
அவ்வாறான பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பதை விட எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சேர்பிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
நடைமுறை போர் தொடர்பில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்போது அது எதிர்விளையை தரும். மாறபாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் முக்கிய விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்ட பின்னர், இரண்டு தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறுவதே சிறந்தது என்று லாவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடி சந்திப்பு நடத்தப்படவேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்த நிலையிலேயே ரஷ்யாவின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வாரத்தில் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே துருக்கியில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.