ஜெட் விமானங்களை மறைத்து வைத்திருக்கும் ரஷ்யா: வெளிவரும் முக்கிய தகவல்கள்
ரஷ்ய பணக்காரர்களுக்கு சொந்தமான 100 ஜெட் விமானங்கள் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைனின் தலைநகர் கிவ் உட்பட அனைத்து நகரங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வான்வழி தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளன.
உலக நாடுகள் தொடர்ந்து தடைகளை விதித்து ரஷ்யாவை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க முயற்சி செய்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வரும் ரஷ்யாவுக்குப் பல நாடுகள் தொடர்ந்து அதரவும், நட்புறவையும் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைத் தொடர்ந்து உலக நாடுகள் கைப்பற்றி வரும் நிலையில்,100 ஆடம்பர பிரைவேட் ஜெட் விமானங்களைத் டுபாயில், ரஷ்ய பணக்காரர்கள் மறைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri