ரஷ்யா - உக்ரைன் மோதல்:இலங்கையில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம்

Srilanka Russia Ukraine War Cost of living Putin Jagath Kumara Europe and US Oil Price
By Steephen Feb 27, 2022 06:01 AM GMT
Report

நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை. இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலைமையில், குறிப்பாக ரஷ்யாவும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் சிறந்த நட்பு நாடுகள். இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இலங்கையின் உறவுகள் போர் நிலைமையால் பாதிக்கப்படலாம்.

இவ்வாறான நிலைமையில், எமது உற்பத்திகள் குறிப்பாக தேயிலை ஏற்றுமதியில் பிரச்சினைகள் உருவாகலாம். ரஷ்யா அதிகளவில் எம்மிடம் தேயிலை கொள்வனவு செய்து எமக்கு உதவும் நாடு.

பல வகையில் ரஷ்யா, இலங்கைக்கு உதவி வருகிறது. உக்ரைனும் இப்படி பல வகையில் உதவி வழங்கியுள்ளது. இதனால், இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என்பது நிச்சயம்.

உலகத்தை எடுத்துக்கொண்டாலும் நிச்சயமற்ற நிலைமை. இந்த நிலைமை மற்றுமொரு போரை நோக்கி இட்டுச் செல்லுமா என்பது பிரச்சினைக்குரியது.

ரஷ்யா, உக்ரைன் பிரச்சினையுடன் டொலர் பிரச்சினை ஏற்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்தால், அடுத்த சில நாட்களில் வாழ்க்கை செலவு இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கும்.

மீண்டும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எரிவாயு விலையும் அதிகரிக்கும். டொலர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

இந்த அனைத்து நெருக்கடிகளும் ஏற்படும் போது, அது நாட்டுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இவை நாம் உருவாக்கிக்கொண்ட பிரச்சினைகள் அல்ல. ரஷ்யாவையும் உக்ரைனையும் நாம் சண்டையிட்டு கொள்ளுமாறு கூறவில்லை எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள் 

ரஸ்யாவுக்கு எதிராக சர்வதேச முக்கிய "முடக்கல்" அமுல். அமெரிக்க சார்பு நாடுகள் அறிவிப்பு! 

உதவ முன் வருபவர்களுக்கு ஆயுதங்கள் தருகின்றோம்! - உக்ரைன் அதிபர் அறிவிப்பு 


மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US