அமெரிக்காவின் முன்மொழிவுக்கு உக்ரைனின் பதில்: போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே உக்ரைன் அரசாங்கம் இதனை தெளிவுபடுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உதவியை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை
இந்நிலையில், இது உக்ரைனில் அமைதிக்கான ஒரு முக்கியமான தருணம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா இப்போது போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நியாயமான மற்றும் நிரந்தரமான வழியில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |