அதிபர் புடினுக்கும் ஐ.நா.பொது செயலாளர்க்கும் இடையே முக்கிய சந்திப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இச் சந்திப்பானது அடுத்த வாரம் ரஷ்யாவில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மாநில செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ நோவோஸ்டியிடம் இந்த சந்திப்பு ஏப்ரல் 26 அன்று நடைபெறும் என்றும், குட்டெரெஸ் முதலில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து குட்டெரெஸ் பேசுவார் என ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை "நிறுத்தப்பட்டுவிட்டது" என்று ரஷ்யாவின் உயர்மட்ட இராஜதந்திரி கூறியதை அடுத்து இந்த சந்திப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.