ரஷ்ய - உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் : விசாரணை செய்ய ஜனாதிபதி உத்தரவு
அமைச்சரவையின் முன் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட விசா நீடிப்புக்களை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலவச விசா நீடிப்பு
கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்ட இலவச விசா நீடிப்பை இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் வியாபாரத்தில் ஈடுபட்டு இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |