கிழக்கு உக்ரைனில் அமில கிடங்கை குறி வைத்த ரஷ்யா! பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற தடை
உக்ரைன் மீது ரஷ்யா 41ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,ரஷ்யா தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் அமில கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது ரஷ்ய படைகள் தங்கள் கவனத்தை கிழக்கு உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளதுடன், அங்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நைட்ரிக் அமில கிடங்கினை ரஷ்ய படைகள் தாக்கி உள்ளன.
நைட்ரிக் அமில சேமிப்பு கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளமையினால், இதை சுவாசித்தால், விழுங்கினால், அது சருமத்துடன் தொடர்பு கொண்டால் அது ஆபத்தானது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவுகள், ஜன்னல்களை மூடிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும். ஈரமான முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்ய படைகள் கைவிடாத நிலையில், எதிர்வரும் வாரங்களில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் கவனம் செலுத்த முயற்சிக்கும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.