இராணுவ தளங்களை குறி வைத்த ரஷ்யா - உக்ரைனுக்கு நெருக்கடி
உக்ரைனின் முக்கிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனுக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன் தனது எரிபொருள், உணவுச் சேகரிப்புக் கிடங்குகளை தொடர்ந்து ரஷ்யா அழிப்பதாகத் அல்ஜெஸுரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்யும் என்ற நகரில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரியும் காட்சிகளின் செயற்கை கோள் படங்களும் வெளியாகியுள்ளன.
மேலும் ஈர்பின் ஆற்றிற்கு அருகேயும் சில கட்டடங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது.
அங்கு ஆளில்லா பீரங்கிகளும் கவச வாகனங்களும் அந்த நகரில் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிழக்கில் உள்ள பகுதிகளில் மாத்திரமே தாம் கவனம் செலுத்துவதாக ரஷ்யா தெரிவித்திருந்தனது. எனினும் இந்த தாக்குதல் வெளியிட்ட தகவலுக்கு மாறாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
மேற்கில் லிவிவ் நகரிலும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2500 கிலோமீற்றர் தூரம் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த கெலிபர் ஏவுகணைகளை, உக்ரைன் மீது செலுத்திய காணொளியை ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்தத் தாக்குதல்களால் அதிமுக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாக உக்ரேன் தெரிவித்துள்ளது.