உக்கிரமடையும் போர் : உக்ரைனிய நகர் மீது திடீர் ஷெல் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா
உக்ரைனிய நகரான லிவிவ்(Lviv) மீது ரஷ்யா புதிதாக ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனிய எல்லை பகுதியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறித்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் தலைவர் கிளைமென்கோ (Klymenko) தெரிவித்துள்ளார்.
பதவி விலகல்
இந்நிலையில் உக்ரைனின் முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல் செய்து வருவது ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
Lviv shelled, seven people were killed, three of them children - head of the Ministry of Internal Affairs of Ukraine Klymenko
— NEXTA (@nexta_tv) September 4, 2024
More than 30 people were injured in the shelling of Lviv - Zelenskyy pic.twitter.com/XMt98wruo6
இதனையடுத்தே உக்ரைனிய நகரான லிவிவ் மீது ரஷ்ய படைகள் புதிய ஷெல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மேலும், லிவிவ் நகரில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |